Tuesday, September 30, 2025
Homeவிவசாயம்அட்மா திட்டத்தின் கீழ் தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்த சுற்றுலா

அட்மா திட்டத்தின் கீழ் தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்த சுற்றுலா

Agricultural Technology Management Agency (ATMA)

வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா (Agricultural Technology Management Agency – ATMA) திட்டத்தின் கீழ் வெளி மாநிலத்திற்கான விவசாயிகள் சுற்றுலா இனத்தில் தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்த சுற்றுலாவிற்கு மதுக்கூர் வட்டாரத்தை சார்ந்த 20 விவசாயிகளை ஐந்து நாள் பயிற்சிக்கு மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் காசர்கோட் கேரளா அழைத்துச் செல்லப்பட்டது.

சமூக அறிவியல் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். பொன்னுசாமி அவர்கள் கால்நடைகள் வளர்ப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் தீவன பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தார்.

Agricultural Technology Management Agency1

பூச்சிகள் துறை பேராசிரியர் முனைவர். சுசித்ரா அவர்கள் தென்னை மரங்களை அதிகமாக தாக்கும் காண்டாமிருக வண்டு, சிகப்புக்கோன் வண்டு மற்றும் ரூகோஸ் வெள்ளை சுருள் ஈ தாக்குதலை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அதனை கட்டுப்படுத்துதல் குறித்த தங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி செய்த தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார்.

நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர். டாலியாமோல் அவர்கள் தென்னையை அதிகமாக தாக்கும் குருத்து அழுகல் நோய், தென்னையில் சாறு வடிதல் மற்றும் வேர் வாடல் நோயினால் பாதிக்கப்பட்ட மரங்களை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார்.

முனைவர். சுதா அவர்கள் தென்னை தாய் மரங்கள் தேர்வு செய்தல், ஒட்டு கட்டுதல் தென்னை நாற்றுகள் தேர்வு செய்தல் மற்றும் தென்னை நடவு செய்தல் குறித்த தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் தெரிவித்தார்.

ATMA

தென்னையில் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் துறை முனைவர். மணிகண்டன் அவர்கள் தென்னை எண்ணெய் என்று மட்டும் இல்லாமல் அது ஒரு உணவுப் பயிர், மருத்துவ குணமிக்கது, குடிக்கும் பானம், கார்பன், கலை பொருட்கள் மற்றும் கயிறு தயாரித்தல் போன்ற பொருட்கள் தயாரிக்க உதவுவதாக தெரிவித்தார். இந்த தென்னையில் உள்ள லாரிக் அமிலம் தோல் நோய் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கிறது, இதில் ஜீரோ கொழுப்பு, ஜீரோ சுகர், உடல் வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடிய தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்கும் இயந்திரங்களை நேரடியாக காண்பித்து விளக்கம் அளித்தார்.

பயிர் மேலாண்மை துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். நிரல் அவர்கள் தென்னையில் உள்ள பல்வேறு வகையான மாற்றங்கள் மற்றும் மாற்றத்தினை பயன்படுத்தி புதிய வகையான ரகங்கள் உற்பத்தி செய்தல் குறித்து விவசாயிகளிடம் நேரில் காண்பித்து விளக்கம் அளித்தார்.

ATMA

முதன்மை விஞ்ஞானிகள் துறை பேராசிரியர் முனைவர். தம்பன் அவர்கள் அரசு சங்கங்கள் மூலம் குழுக்கள் அமைத்தல் அதன் மூலம் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைத்தல். மேலும் தொழில் தொடங்குதல் போன்ற விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தினை குழுக்கள் மூலம் மேம்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

நுண்ணுயிர் இயல் துறை பேராசிரியர் முனைவர் பால்ராஜ் அவர்கள் உயிர் உரங்கள் பயன்படுத்துதல் மற்றும் இயற்கை பூஞ்சான கொல்லிகள் பயன்படுத்துதல் குறித்து காணொளி காட்சி மூலம் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

தென்னையில் நீரா பானம் உற்பத்தி செய்தல் குறித்த செயல்விளக்கம் முனைவர். பாண்டியன் அவர்கள் விவசாயிகளுக்கு நேரடியாக செய்து காண்பித்தார்.

முனைவர். பஞ்சவர்ணம் அவர்கள் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள ஊடுபயிர் சாகுபடி முறைகள், நாற்றங்கால் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய முறை முதலியவற்றை விவசாயிகளுக்கு நேரடியாக காண்பித்தார்.

ATMA

மண் அறிவியல் துறை முனைவர். செல்வமணி அவர்கள் மண்வளத்தினை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் தெரிவித்தார். மேலும் மண் பரிசோதனை முடிவின் அடிப்படையில் உரத்திணை பயன்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

RELATED ARTICLES

1594 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments